க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பு மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது - கல்வி அமைச்சர்

 க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பு மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது - கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின்துண்டிப்பு மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த (01) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டணம் தொடர்பில் (01) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சரவை மற்றும் மின்சார சபையிடம் முன்வைக்கயிருப்பதாகவும் கல்வி மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், வருட இறுதியில் ஏற்படவிருக்கும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments