கொத்தியாபுலை கலைவாணி மகா வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா ...
மட்/மமே/கொத்தியாபுலை கலைவாணி மகா வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா பிரதி அதிபர் த.செந்தில்ராஜன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வரலாறு பாடத்தின் உதவி கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் மேம்பாட்டு இணைப்பாளருமான க.ரகுகரன் அவர்களும், கெளரவ விருந்தினராக ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் வே.திவாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர்கள் ஆகியோர் பங்கு பற்றினர். இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வலய மட்ட ஆங்கில தின போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கு நினைவுசின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
Comments
Post a Comment