ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகம்.....
மட்டக்களப்பு விமான நிலைய வீதி, திருப்பெருந்துறை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகம் 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் ஆலயம் மற்றும் நூதன எழுந்தருளிய பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிகள் திருவுருவச்சிலை ஆகியன கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.
09.12.2022 வெள்ளிக்கிழமை அன்று கர்மாரம்பம் சடங்கும், 10.12.2022 சனிக்கிழமை எண்ணெக்காப்பு சடங்கும், 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் மற்றும் மன்டலாபிஷேக சடங்கும், 22.12.2022 வியாழக்கிழமை சங்காபிஷேக சடங்குடன், 23.12.2022 வெள்ளிக்கிழமை நிறைவுக்கு வரும்.
Comments
Post a Comment