“சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி” என்ற திட்டத்தில் ஏறாவூர் நரக சபை
இந் நிகழ்வில் ஏறாவூர் பெண் சந்தை வீதியின் 7ஆம், 8ஆம் குறுக்கு வீதிகளை அழகுபடுத்தும் முகமாக வீதியின் இரு மருங்கிலும் பூக்கும் மல்லிகை மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
இதன்போது நகரசபைச் சுத்தம் மற்றும் பசுமையை நோக்கி என்ற கருத்திட்டத்தின் நலன் விரும்பிகள், முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்கள், பிரதேச வாசிகள் எனப் பலரும் பங்குபற்றினர்.
“சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி” என்ற நகர சபைத் தவிசாளரின் எண்ணக்கருவிற்கு இணங்க, சுமார் 5000 மல்லிகை மரங்களை, பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், உள்ளுர் வீதிகளின் இரு மருங்குகள், சமயப் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் குவிப்பதைத் தவிர்த்து, நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு மாத்திரம் அவற்றை வழங்கி, தமது வீட்டுக் கழிவுகளை அகற்றும் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக,உள்ளுர் வீதிகளின் இருமருங்கிலும் பூக்கும் மல்லிகைகள் நாட்டப்படுவதுடன், பொது இடங்களிலுமாக சுமார் 2000 மல்லிகை மரங்கள் இதுவரை நடப்பட்டுள்ளதாகத் தவிசாளர் தெரிவித்தார்.
மேலும், பலன் தரும் மரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நகர சபைப் பிரிவில் வாழும் 10,000 குடும்பங்களில் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மரம் வீதம் சுமார் 10,000 பலா மரக்கன்றுகள் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் 2000 மரங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
இம்மர விநியோக மற்றும் நடுகைத் திட்டத்தில் 2022இல் முன்பள்ளியில் மற்றும் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு சேர்ந்த சிறார்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களையும் இம்மர நடுகை செயற்பாட்டில் ஈடுபடுத்தி வருவாதாவும் அவர் கூறினார்.
Comments
Post a Comment