இரண்டாவது போட்டியில் மடும்பா கிரிக்கெட் கழகம் அபார வெற்றி.....
EPPயின் இரண்டாவது கிரிக்கெட் திருவிழாவின் இரண்டாவது போட்டியில் சுமட சம்பத் மற்றும் சகாஸ் அனுபாம ஆகியோரின் துள்ளியமான பந்துவீச்சால் மடம்ப கிரிக்கெட் அக்கடமி தம் முதல் வெற்றியை பதிவிட்டுக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடி நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் அபூர்வன் 15 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார் பந்து வீச்சில் மடம்ப கிரிக்கெட் அக்கடமி சார்பாக சுமட சம்பத் துள்ளியமாக பந்து வீசி 05 விக்கெட்டுக்களையும், சகாஸ் அனுபாம துள்ளியமாக பந்து வீசி 04 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். இவர்களின் பந்து வீச்சில் மட்டக்களப்பு நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி 72 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மடம்ப கிரிக்கெட் அக்கடமி 10 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மோஸஸ் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
17ம் திகதி காலை 9.00 மணிக்கு முதல் போட்டியில் மட்டக்களப்பு ஈஸ்டன் ஸ்டார் அக்கடமியும் மட்டக்களப்பு EPP அக்கடமியும் மோதவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Comments
Post a Comment