அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் ..............
குறைந்த பட்சம் 10 வருட காலம் செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்கவேண்டும். முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம். எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு.
யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம். ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள், பெண்போலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.
30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிகொடையைப் பெற்றால்) கிடைக்கும். இது சம்பளத்தைப் பொருத்து வித்தியாசப்படும் .13,280/= சம்பளத்தைப் பெற்று கொண்டு இருப்பவர் 85% தையும் 37,805/=ரீ சம்பளத்தைப் பெற்று கொண்டு இருப்பவர் 75% தையும் ஓய்வூதியமாகப் பெறுவார். அத்தோடு வாழ்க்கைச் செலவுப் படி 3,525/=வும், விசேட படி 3,500/= வும் மேலதிகமாகக் கிடைக்கும்
30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும். 20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும்
ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= வாகும் .இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/=வே ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.
சேவையில் சேர்ந்து 5 வருட காலத்துக்கு முன்னர் மரணமடைந்தால் ஒரு வருடத்திற்கு ஒரு மாத சம்பளம் என்ற அடிப்படையிலும் சேவைக்காலம் 5 தொடக்கம் 10 வருடம் வரை இருந்தால் ஒரு வருட சம்பளமும், 10 வருடதிற்கு அதிகமானால் கடைசி சம்பளத்தின் 90% த்தின் 24 மடங்கு என்ற வகையிலும் மரணப் பணிகொடை கிடைக்கும்.
Comments
Post a Comment