இலங்கை ஓபன் கராத்தே சம்பியன் போட்டியில் சிறைச்சாலை அணி சம்பியன்....
சிறைச்சாலை கராத்தே அணி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது 2022 மெய்ஜி கோப்பை (MEIJI CUP – 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி வென்னப்புவ சர் ஆல்பர்ட் எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் T. பிரசாத் கலந்து கொண்டு 01 தங்க பதக்கத்தையும் 01 வெள்ளி பதக்கத்தையும் பெற்று இலங்கை சிறைச்சாலைக்கும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கும் பெருமையினை தேடிதந்துள்ளார்.
சாதனை வீரர்களை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய சிறைச்சாலை கராத்தே அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
Comments
Post a Comment