மட்டக்களப்பில் இடம்பெற்ற உள்ளகக் கணக்காய்வு அலுவலர்களுக்கான பயிற்சிப்பட்டறை!!

 மட்டக்களப்பில் இடம்பெற்ற உள்ளகக் கணக்காய்வு அலுவலர்களுக்கான பயிற்சிப்பட்டறை!!

உள்ளகக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் ஊத்தியோகத்தர்களுக்கான நான்கு நாள் பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உள்ளகக் கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் தொழில்வாண்மையை விருத்தி செய்வதற்கான இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி தலைமையில் இடம்பெற்றது.
செயலமர்வின் போது உள்ளக கணக்காய்வின் அரச நிதி, நிர்வாக முறைமைகள் மற்றும் சுற்று நிருபங்களை பின்பற்றி மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பூரண விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளகக் கணக்காய்வின் போது ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக விளக்கங்கள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் எ.எம்.மாஹிர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன், உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் என்.ரமேஷ், திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ஏ.எல்.மஃரூப் ஆகியோரும் மேலும் பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.








Comments