மட்டக்களப்பு மாநகரசபையில் பதிவு செய்யப்பட்ட படவரைஞர்களுடனான கலந்துரையாடல்....
மட்டக்களப்பு மாநகரசபையில் பதிவு செய்யப்பட்ட படவரைஞர்களுடனான ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் T.சரவணபவான் அவர்களின் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாநகரசபையில் திட்டமிடல் பிரிவில் படவரைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் திட்டமிடல் பிரிவின் ஊடாக வரைபட அனுமதி நடவடிக்கைகளை எவ்வாறு விரைவாகவும் தடைகளின்றி செய்வது என்பன தொடர்பாக படவரைஞர்களுடன் கலந்து ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் அவர்களுக்கான சில ஆலோசனைகளும் மாநகரசபையினால் வழங்கப்பட்டது.
மேலும் படவரைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் வழிகாட்டல்களும் கூட்டத்திலே வழங்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மாநகர ஆணையாளர், பொறியியலாளர், திட்டமிடல் பிரிவின் நிருவாக உத்தியோகஸ்த்தர், தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் மாநகர சபை படவரைஞர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment