மட்டு மாவட்ட அரச அதிபரை வாழ்த்தி விடை கொடுத்த மட்டு சமுர்த்தி திணைக்களம்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிபராகவும், மாவட்ட செயலாளராகவும் மற்றும் சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றி 31.12.2022 அன்று ஓய்வு பெற்றுச்செல்லும் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 30.12.2022 அன்று வாழ்த்தி கௌரவித்து விடை கொடுத்தது.
30.12.2022 அன்று மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களினாலும் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்து வாழ்த்தி கௌரவத்தி இருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திறம்பட செயற்படுத்துவதற்கும், வினைத்திறனான சமுர்த்தி வங்கிச்சேவையினை பொது மக்களுக்கு வழங்குவதற்கும், சமுர்த்தி வங்கி கணனி மயமாக்கல் வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கான ஊக்குவிப்பினை வழங்கி, சகல சமுர்த்தி தினைக்கள வேலைத்திட்டங்கள் தொடர்பாக சீரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கி பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
Comments
Post a Comment