சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். காண்டீபன் தேசியத்தில் முதலிடம்.....
தேசிய சமூக பாதுகாப்பு ஓய்வூதிய சபையின் அதிக இலக்கை அடைந்தோருக்கான கௌவரம் அன்மையில் கொழும்பில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரான எஸ்.காண்டீபன் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்திருந்தார். இவருக்கான விருதும் சான்றிதழும் அன்மையில் தேசிய சமூக பாதுகாப்பு சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை மட்டகளப்பு மாவட்டத்திற்கும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கும் பெருமை தேடித்தந்த எஸ்காண்டீபன் அவர்களுக்கு (2022.12.05) ஆகிய இன்று பிரதேச செயலாளர் வீ. தவராஜா ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment