மாணவர்களுக்கு இலவசமாக கொப்பிகள் வழங்கி வைப்பு.....

 மாணவர்களுக்கு இலவசமாக கொப்பிகள் வழங்கி வைப்பு.....

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடி தெற்கு 167/C கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இப் பிரிவிலுள்ள ரீசா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர் கலந்து கொண்டு அப்பியாச கொப்பி வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன் போதும் இப்பிரிவிலுள்ள 46 மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் மயூரி பிரிவு கிராம உத்தியோகத்தர் சம்ஹா அபிவிருத்தி உத்தியோகத்தர் இர்பான், புதிய காத்தான்குடி சமுர்த்தி வலய உதவியாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்வர் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments