சமுர்த்தி வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பதற்கான நடவடிக்கை.......
உணவு பாதுகாப்பு, போசனையை இலக்காக கொண்ட வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்களில் சிறப்பாக செயற்படும் வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கான பயிர் விதைகள் பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர்களிடம் (13) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ், கருத்திட்ட முகாமையாளர் A.L.அலி அக்பர், வங்கி பிரிவுக்கு பொறுப்பான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment