இன்னாசியார் ஆலய இளைஞர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு.....

 இன்னாசியார் ஆலய இளைஞர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு.....

மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலய இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்களின் வழிகாட்டுதலில் (10) அன்று மிகச்சிறப்பாக இரத்ததான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளிற்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இனைந்து டச்பார் புனித இன்னாசியார் ஆலய இளைஞர் ஒன்றியம் இவ் இரத்ததான நிகழ்வை நடாத்தி இருந்தது. இதன் போது 50 கொடையாளிகள் தங்கள் இரத்தத்தினை தானமாக வழங்கி இன்னோர் உயிர் காக்க உதவியுள்ளனர்.

அன்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலான அமைப்புக்கள், நிறுவனங்கள், ஆலயங்கள், தனியார் நிறுவனங்கள் இரத்ததான நிகழ்வை நடாத்தி வருகின்றன பாராட்டத்தக்க விடயமாகும்;.

 இன்றும் (12) அன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் ஹெல்ப் எவர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது முடியுமானவர்கள் தங்கள் இரத்தத்ததை கொடுத்து இன்னேனர் உயிர் காக்க முன்வருவோம்.








Comments