மட்டுநகர் புகையிரத ஒழுங்கை திறந்து வைக்கப்பட்டது...............

 மட்டுநகர் புகையிரத ஒழுங்கை திறந்து வைக்கப்பட்டது...............

மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக மட்டுநகர் புகையிரத ஒழுங்கை (14) திகதி திறக்கப்பட்டுள்ளது.
இவ்வீதியானது 320 மீற்றர் நிளமும் 11மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பவேலைகள் முதல் கட்டபணி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஐா சரவணபவனின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது.
மாநகரசபையின் 11 மில்லியன் நிதியில் இருந்தும் மேலதிகமான நிதியியை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவருடைய விசேட நிதியில் இருந்து 3 மில்லியன் நிதியினையும் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கையை அகலப்படுத்தும் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விடுதி ஒன்று உடைக்கவேண்டியிருந்தது. அதனை உடைப்பதற்கு நட்ட ஈடாக 1.7மில்லியன் நிதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மாநகர சபையினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்சார வீதி விளக்குகள் வடிகான் மற்றும் நடைபாதை உட்பட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யப்பட்ட வீதியாக அமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்க முடிந்தது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் மாநகர உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments