இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு!!

 இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு!!

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மாகாண ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படும் சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் நேற்றும், இன்றும் நடைபெற்றுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நஜீம் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியருமான முகமது பைரூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு வளவாண்மை செய்த செயலமர்வில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு செயலமர்வினை வழிநடாத்தியிருந்தனர்.
இச் செயலமர்வின் போது சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்குதல், சுற்றுச் சூழல் ஊடகவியல், ஊடகவியலாளர்களின் பணி, சுற்றுச் சூழல் அறிக்கையிடலின் முக்கியத்துவம், வளங்களை பாதுகாத்தல் தொடர்பான செய்தியறிக்கையினை மேற்கொள்வதில் உள்ள சவால்கள், சுற்று சூழல் பிரச்சனைசளுக்கு பின்னால் உள்ள இயக்கிகள் மற்றும் தகவல் அறியும் சட்டமூலம் என்பன தொடர்பாக ஊடகவியலாளர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த செயலமர்வின் நிறைவில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











Comments