கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை முகாம்......
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை முகாம் குருமன் வெளியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட குருமன்வெளி சுகாதார வைத்திய நிலையத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவ பொருட்கள் வழங்கும் நிகழ்வு குருமன்வெளி சுகாதார சேவை நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கை குடும்பத்திட்ட சுகாதார நிலையம் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவகத்துடன் இணைந்து இந் நிகழ்வை நடாத்தியது. இலங்கை குடும்பத்திட்ட சுகாதார நிலைய மட்டக்களப்பு முகாமையாளர் இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஞ்சய், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர் அருள்ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி இருந்தனர்
மேலும் இந்நிகழ்வில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் தொற்றும், தொற்றா நோய்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 25,000 ரூபாய் பெறுமதியான பிரசவ பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment