சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு!!

 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு!!



போரதீவு பிரதேச செயலக பிரிவில் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சந்தைப்படுத்தல் தொடர்பான முகாமைத்துவ செயலமர்வு பெரிய போரதீவு கைப்பணி உற்பத்தி சங்க நிலையத்தில் இடம்பெற்றது.
இந் செயலமர்வில் சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், பெறுமதி சேர் பொருட்களுக்கு அதிகளவு இலாபம் பெறமுடியும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி பிரிவின் உத்தியோகத்தர் டி.நிரோஷன், எஸ்.ஆர்.ராஜேந்திரன் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments