தலைமையக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பில்......
இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் (06) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் 2022ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி, விளையாட்டு, தமிழ்தின போட்டிகளில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அதே போல் சமுர்த்தி வேலைத்திட்டத்திலும் கணணி மயமாக்கல் வேலைத்திட்டத்தில் பல முன்னேற்ற செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதை தாம் அவதானித்தாகவும் தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக சமுர்த்தி பிரிவு செயற்படுமாறும கேட்டுக் கொண்டார்;.
இந்நிகழ்வில் தலைமையக காரியாலத்தில் இருந்து சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கும், விளையாட்டு பிரிவுக்கும் பொறுப்பான உதவிப்பணிப்பாளர் காமினி அபய விக்கிரம அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவுக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் ஈ.வீ.டி.புஸ்பகுமார அவர்களும், மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் அவர்களும் கலந்து கொண்டு முன்னேற்ற மீயாள்வு தொடர்பாகவும் 2023ம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினர்.
இதன் போது கருத்து தெரிவித்த உதவி பணிப்பாளர் காமினி அபயவிக்கிரம அவர்கள் தற்போது நாட்டில் 17,90,000 பேர் சமுர்த்தி நிவாரனம் பெறுபவதாகவும்; 7,00,000 பேர் காத்திருப்போர்; நிவாரனத்தை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டதுடன், முப்பதாயிரம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தற்போது இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டு, இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தான் இனி வரும் காலங்களில் சமுர்த்தி செயற்பாட்டின் முதுகெழும்பாக திகழவுள்ளதாக தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இவ்வமைப்பு ஊடாக சாதாரண ஒரு சமுர்த்தி பயனுகரி அக்கிராமத்திலேயே பத்தாயிலம் ரூபாய் கடனை ஒர நொடியில் பெறமுடியும் எனவும் சமுர்த்தி பயனுகரி ஒருவர் சமுர்த்தி வங்கியூடாக இருபது லட்சம் ரூபாய் கடன் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன் போது உரையாற்றிய உதவிப் பணிப்பாளர் புஸ்பகுமார அவர்கள் 2023ம் ஆண்டில் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி பிரிவிவால் ஒவ்வொரு கிராமத்திற்கும் 7,50,000 பெறுமதியான 03 வீடுகளும், 2,50,000 பெறுமதியான 03 வீடுகளும் வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வீடுகளை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களேயே தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், இவ்வீடமைப்பை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் உத்தியோகத்தர், முகாமையாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பணப்பரிசில்களும் இனி வரும் காலத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஜ.அலியார் அவர்கள் உரையாற்றுகையில் 2023ம் ஆண்டில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக விசேட வாழ்வாதார வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் வெளியநாட்டு வேலைவாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஜப்பான மொழி கற்பித்தலை ஊக்கப்படுத்துவதுடன், கிராம மட்டத்தில் இருந்த தேசிய மட்டத்திற்க ஒரு உற்பத்தியாளரை உருவாக்க வேண்டும் என்றும், விளையாட்டை முன்னிலைப்படுத்தி முன்னேற்றகரமான செயற்பாடுகளினால் தேசிய மட்டத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்றார், அத்துடன் பசுமையான தேசம் எனும் கருப்பொருளில் மரநடுகையை முன்நிலைபடுத்துமாறும் கூறினார்.
இம் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்களும், 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்களும், 14 பிரதேச செயலகங்களுக்கான சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர் மற்றும் செயலாளர்களும் கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment