மட்டக்களப்பில் நடைபெற்ற சமாதான மாநாடு!!
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட மதத் தலைவர்கள், இளைஞர் யுவதிகளுக்கு சமாதானம் தொடர்பான மாநாடு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை, மாவட்டங்களிலுள்ள இந்து, கிறிஸ்த்தவம், இஸ்லாம், மற்றும் பௌத்த மதத் தலைவர்கள், தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகள், உள்ளடங்கலாக சுமார் 100 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மாநாடு நடைபெறும் விடுதி வரைக்கும் சமாதானத்தை முன்நிறுத்தி நடைபவனி ஒன்று இடம்பெற்று, பின்னர் சமாதானம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் மாநாடும் இடம்பெற்றது.
இதன்போது இன, மத சகவாழ்வு, மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொடர்பிலும், கலந்து கொண்ட அனைத்து இளைஞர் யுவதிகள், மற்றும் மதத் தலைவர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், மனித உரிமை ஆர்வலர் அருண் சிவஞானம், மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் உதவித்திட்ட முகாமையாளர் ரசிக்க செனவிரத்ன ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கங்களை வளங்கினர்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.மனோகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், திட்ட அதிகாரி என்.பாஸ்தேவன், திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ண, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ண, திட்ட அலுவலர் ஜசானியா ஜயரத்ன, றேணுகா ரத்னாயக்க, சனம் டில்ஷான் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment