காத்தான்குடியில் பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்!!

 காத்தான்குடியில் பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்!!

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் 1985ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரம் 1988ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் (09)ம் திகதி காத்தான்குடியிலுள்ள தனியார் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் 1985ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரம் 1988ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் பிள்ளைகள் கல்விப் பொதுத்தராதர சாதரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் சமூக செயற்பாட்டாளர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் எம்.எஸ்.எம்.நுஸைர், காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா சபீன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன், உப தலைவர் பொறியியலாளர் பளுள்ஹக், பொறியியலாளர் எம்.மாஹீர் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன், இதன் போது 11 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Comments