மட்டக்களப்பு கலால் திணைக்களத்தால் சுற்றி வளைப்பு 750000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றல் - கலால் அத்தியட்சகர் தெரிவிப்பு....

 மட்டக்களப்பு கலால் திணைக்களத்தால் சுற்றி வளைப்பு 750000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றல் - கலால் அத்தியட்சகர் தெரிவிப்பு....

மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்களத்தால் (01) அன்று கிரான் பிரதேசத்தில் ஒரு சுற்றி வளைப்பில் ஈடுபட்ட போது 750000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்ப மாவட்ட கலால் திணைக்கள அத்தியட்சகர் S.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்களத்தின் அத்தியட்சகர் S.ரஞ்சன் அவர்களின் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் கிரான் பிரதேசத்திற்கு உட்பட்ட குளத்துமடு மற்றும் வாகனேரி பிரதேசங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி தயாரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அடிப்படையில் அங்கு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு சட்ட விரோத மதுபானத்திற்கு பயன்படுத்தப்படும் 750000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 600 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்தையும், அதற்கு பயன்படுத்தும் பல சாதனங்களையும் கைப்பற்றி இருந்தனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்ட்டுள்ளதாலும் அவற்றை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் மட்டக்களப்பு கலால் திணைக்களம் இவ்வாறான செயல்திட்டங்களை முன்னெடுத்த வரவதை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.









Comments