கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடலும்!!

 கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடலும்!!

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா தலைமையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி மண்டபத்தில் நேற்று (17) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது குறித்த விளையாட்டு கழகத்தினை உருவாக்கிய ஆரம்பகட்ட காரண கர்த்தாக்களாக திகழ்ந்தவர்களான சிவநாதன், வினோபா இந்திரன், சூரியகுமார், ஜீவகுமார், பீட் ஜோசப், தேவராஜன், தியாகராஜா ஆகியோர்களினால் குறித்த இலட்சினை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், தற்போது கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இளையோராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள செல்வன் சாறுக்ஷன் மற்றும் சாறுகனிடமும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்னும் 50 ஆண்டுகள் கடந்து 100வது ஆண்டு பூர்த்தியினை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இதன்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் குறித்த கழகத்தின் போசகர்களில் ஒருவரான முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் முக்கிய உறுப்பினரான புவனசிங்கம் வசீகரன், மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள அத்தியட்சகர் ரஞ்சன், அம்பாரை மாவட்ட கலால் திணைக்கள அத்தியட்சகர் எஸ்.தங்கராஜா, கழகத்தின் பணிப்பாளர் சபையின் பிரதிநிதியான ச.காசிப்பிள்ளை, விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதன்போது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களுக்கான சாதனை விருதுகளும் 2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கேளிக்கை விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















Comments