நலன்புரி உதவிகளுக்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள்......
அரசின் நலன்புரி நன்மைகள் சபை உதவிகளுக்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியான தனிநபர்கள் அல்லது குடும்பங்களை அடையாளம் காண்பதற்காக பிரதேச செயலக மட்டத்தில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அரசாங்க உதவியை நாடும் அல்லது பெறும் எந்தவொரு நபரும் இந்த நன்மைகளுக்கு பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களில், தற்போது சமுர்த்தி உதவி, முதியோர் உதவி, ஊனமுற்றோர் வாழ்வாதார உதவி, சிறுநீரக நோய் வாழ்வாதார உதவி, மற்றும் பொது உதவியைப் பெற்றுக்கொள்பவர்கள் அல்லது எதிர்பார்க்கும் மக்களும் உள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment