309 நாளில் மாதாவின் புதுமை நாவற்குடா சின்ன லூர்து அன்னை புதிய ஆலத்தின் உருவாக்கம்.........

 309 நாளில்  மாதாவின் புதுமை நாவற்குடா சின்ன லூர்து அன்னை புதிய ஆலத்தின்  உருவாக்கம்.........

நாவற்குடா சின்ன லூர்து புதிய ஆலயம் புதுப்பொலிவு செய்யப்பட்டு இன்று (16) 08 வருடங்கள் நிறைவை எட்டியுள்ளது. இதன் நிமித்தம் இவ்வாலயம் அமைக்கப்பட்டது தொடக்கம் முடிவுற்றது வரை மாதாவின் அற்புதங்களில் ஒன்றாகவே காணப்படுகின்றது. குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டதை எண்ணும் போது இன்றும் ஆச்சரியமாகவே உள்ளது. எனவே அக்காலத்தில் இவ்வாலயம் அமையப்பெற்ற போது ஒரு செயற்பாட்டு அங்கத்தவராக இருந்ததால் இக்கட்டுரையை மீண்டும் நிணைவூட்ட விரும்புகின்றேன்.

2014.01.01 அருட்தந்தை X.I.ரஜீவன் அடிகளார் புதுவருட திருப்பலியின் போது புதிய ஆலயத்திற்கான கட்டுமான பணிகளை மிக விரைவில்  தொடங்குவோம் என அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக உருவாக்கப்பட்டது தான் ஆலய கட்டிட குழு. எட்டு வட்டாரத்திலும் இருந்து ஒவ்வொரு உறுப்பினருடன் பங்குச்சபை உறுப்பினர்களும் இணைந்து இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கோவிலுக்கான ஒரு வரைபடம் வரைய வேண்டும் அதற்கு யாரை அனுகுவது என்றவுடன் எல்லோர் மனதில் உடனடியாக தெரிந்தவர் இஞ்ஞாசியார் பங்கை சேர்ந்த பிரதர் ரவியண்ணன் தான். அருட்தந்தை உடனடியாக தன் கையடக்க தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்ட போது எது வித மறுப்பும் தெரிவிக்காமல் அதை இலவசமாக செய்து தருவதாக உறுதியளித்தார். இதன் பின் இவ்வாலயம் ஒரு பெரிய ஆலயம் என்பதால் ஒரு சிறந்த எஞ்சினியரின் உதவி நாட வேண்டும் என கேட்ட போது பங்குச்சபை உறுப்பினர் டெஸ்மன் தாண்டவன்வெளி பங்கைச் சேர்ந்த தேவநம்பி எஞ்சினியரை கேட்கலாமே என தெரிவித்த போது, அடுத்த கனமே அருட்தந்தை உடனடியாக தன் கையடக்க தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்ட போது எது வித மறுப்பும் தெரிவிக்காமல் அதை இலவசமாக செய்து தருவதாக உறுதியளித்ததோடு நாளையே தான் அங்கு வருவதாக கூறினார். இத்துடன் முதல் நாள் கட்டிட குழு கூட்டம் இனிதாக முடிவடைந்தது.

  உடனடியாக பிரதர் ரவியண்ணனை அழைத்து ஆலய படம் எப்படி வரவேண்டும் என கூறிய போது அதை அவர் மிக விரைவாக வரைந்து தந்தார், இதற்காக பங்குசச்சபை உறுப்பினர் ரொனால்ட் கொஸ்தா மும்முரமாக செயற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். தேவநம்பி எஞ்சினியரை குருவானவர் அழைத்த போது அவரும் மாதாவுக்செய்வதென்றால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறி ஆலயத்திற்கு வந்தார். அவர் ஆலயத்தின் நீள அகலத்தை கணித்தார் நீளம் 110 அடியாகவும், அகலம் 50 அடியாகவும், உயரம் 70 அடியாகவும் அமைக்கலாம் என பேசப்பட்டது எல்லோர் மனதிலும் அப்பவே பெரிய ஆலயத்தின் படம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்ததாக கட்டுமான பணிக்கு ஒரு நல்ல மேசன் தேட வேண்டும் என கேட்ட போது பலரையும் சந்தித்து விலைப்பட்டியல் கோரி செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டதுடன் பொருட்கள் கொள்வணவு செய்ய ஒரு குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

   ஆரம்ப கட்ட வேலை செய்வதற்காக அமரர் செலஸ்டின் அவர்கள் மண், கம்பி, கருங்கல் போன்றவற்றை வழங்கினார். ஆலய கட்டமான பணிக்காக ஒரு மேசனை தேடி கொண்டு வந்திருந்தார் பங்குச்சபை உறுப்பினர் டெஸ்மன். அவர் தான் கொம்மாதுறையைச் சேர்ந்த கஜேந்திரன், அவர்களை அழைத்து வந்து அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு ஒப்பம் பெறப்பட்டு வேலை தொடங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

  கட்டுமான பணிகளை 2014.02.11 அன்று தொடங்கலாம் என தீர்மானித்து அருட்தந்தை நோட்டன் அடிகளாருடன், எங்கள் பங்குத்தந்தை X.I.ரஜீவன் அடிகளார்களுடன் பங்கு மக்களும் இணைந்து கட்டுமான பணியாக முதல் கம்பிக்கூட்டை பங்குத்தந்தை அவர் உயர்த்த கட்டமான பணி தொடங்கப்பட்டது. மிக விரைவாக கட்டுமான பணிகள் மும்முரமாக ஒரு பக்கம் செயற்பட பங்குத்தந்தை 40 தூண்கள் போட வேண்டும் என கூறி ஒரு குடும்பம் ஒரு தணித்தான் தரலாம் அல்லது வட்டார குழுக்களாக தரலாம், அல்லது வட்டாரமாக தரலாம் என கூற 19 தூண்களுக்கு வெளிப்பங்கு, வட்டாரங்கள், பங்கு மக்கள் முன் வந்தனர். பங்குச்சபை உறுப்பினர்களும் மறுபுறம் வட்டாரங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் பங்கு மக்களும் தினமும் ஆலயத்திற்கு வந்து சிறு சிறு சிரமதானங்களில் ஈடுபட்டனர். இதே வேளை ஆலயத்திற்கான ஒரு நடைமுறை கணக்கை ஆரம்பித்து பொருட்கள் கொள்வணவு செய்வதற்கு காசேலைகள் வழங்கப்பட்டன.

        இதே வேளை தான் ஆலத்தை இடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது இதை எப்படி உடைக்கலாம் என எஞ்சினியரிடம் கேட்போம் என கூறப்பட்டது அதே போல் அவரும் வந்து ஆலயத்தில் மாதவிற்கு ஒரு காரணிக்க செபமாலை சொல்லி விட்டு மாதாவிடம் கேட்டாராம் மாதாவே உன் ஆலயத்தை உடைக்க வந்திருக்கன் இதை மிக விரைவாக கட்டி கொடுத்து உன் புதுமையை காட்டிவிடு என்று வேண்டினாராம். ஆலயம் உடைக்கப்பட்ட போது அருட்பணி குக் அடிகளார் வரைந்த மாதா பேடனேற்றுக்கு காட்சி கொடுத்த படம் எல்லோர் மனதையும் கவர்ந்ததாக அமைந்தது. ஆலயம் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு பணம் பெறப்பட்டது. 

இதே வேளை ஆலய தச்சு வேலை செய்வதற்காக கூழாவடி பங்கைச் சேர்ந்த பெனா அங்கிளை (அருட்தந்தை ஜெரிஸ்டன் அடிகளாரின் தந்தை) பங்குச்சபை உறுப்பினர் டெஸ்மன் அறிமுகம் செய்ய அவ்வேலைகளும் மிக விரைவாக நடக்கத் தொடங்கியது. பங்குத்தந்தை அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்தும் மாதாவின் பக்தர்களிடம் உதவியை கோரினார் அவர்களும் உதவிகளை செய்ய முன்வந்தனர்.

                   ஆலய கட்டுமாண பணிக்காக பங்குத்தந்தை தான் இசையமைத்து உருவாக்கிய முள்ளால் ஒரு மகுடம் இறுவெட்டை விற்பனை செய்தும், வெளியிடங்களில் தன்னை அழைக்கும் செப கூட்டங்களில் பலரின் உதவியையும் பெற்று கட்டுமான பணியை தொடர்ந்தார். மறுபுரம் பங்குச்சபை உறுப்பினர்களிடமும் கட்டிட குழுவிடமும் ஒப்பந்த அடிப்படையில் ஒருவர் 50000 ரூபா தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை சேமிக்க வேண்டும் என அறிவுருத்தினார், தானும் சேமிப்பதாக உறுதியளித்தார். அதன் படி நிதி சேகரிக்கட்டு கொண்டிருந்தது இதே வேளை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கட்டிட குழு கூட்டம் இடம்பெற்ற படியே இருந்தது.

     இதே வேளை ஆலயத்தின் பின் புற மேல் தளத்தில் நாற்கருணைநாதரின் பிரசன்னத்தை வைப்பது என முடிவெடுக்கப்பட்டு அதற்காக  கொங்கறீட் இடவேண்டும் யாரை அனுகலாம் என கேட்ட போது பங்குத்தந்தை பிரதிநிதியான ஜோன் இருதயபுர பங்கைச் சேந்த லாராவை அழைத்த வந்தார். அவரும் மிக குறைந்த செலவில் அதை செய்து முடித்து தந்தார். வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க கட்டிட குழுவினரும், பங்குச்சபை உறுப்பினர்களும் தங்கள் சேமிப்பை வீடு வீடாக, கடை கடையாக தங்கள் குடும்பத்துடனும் வட்டார மக்களுடனும் சென்று சேமித்து பங்குத்தந்தையிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தார்கள்.

   வங்கியில் சேமிக்கப்பட்ட பணத்தை ஆலயத்தின் கூரை இடுவதற்கே பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்ட படியே இதற்குரிய காலமும் வந்தது, இதில் ஓரு விடயத்தை கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும் கப்பலேந்திமாதா வட்டாரத்தை சேர்ந்த சகோதரிகளான லூர்துமேரி அவர்களும் திரவியம் அவர்களும் ஆலய கட்டமாண பணிக்கென 2008ம் ஆண்டே ஒவ்வொருவரும் தனித்தனியே இரண்டரை லட்சம் ரூபா கொடுத்திருந்தமை மாதாவின் புதுமைகளில் ஒன்றாக இருந்தது, கூரை வேலை செய்ய உதயன் அவர்களை அனுகிய போது அவர்களும் மிக குறைந்த விலையில் அதை செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

                ஆலய பீட டொமிற்காக கொங்கிறீட் இடவேண்டும் என்றவுடன் பங்கு மக்கள் நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறி ஒரே நாளில் அணைவரும் ஒன்று கூடி அவ்வேலையை மகிழ்ச்சியுடன் செய்து முடித்தார்கள். இதற்கிடையில் ஆலயத்திற்கான வயறிங் வேலைகளை வெளியில் இருந்து ஆள் எடுப்பதா இல்லையா என கேள்வி எழுப்பப்பட்ட போது  கட்டிட குழு உறுப்பினர் சதீஸ் அவர்கள் இதை நான் இலவசமாக செய்து தருகிறேன் என்னுடன் இணைந்து அலக்சன் அவர்களும் ரொகான் அவர்களும் சசி அவர்களும் இப்பணியை செய்வார்கள்  என்றார் அணைவராலும் ஏற்றுக்கொள்ள இதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டன.

                    பங்குத்தந்தை அவர்கள் தியானங்களுக்கு வெளியிடங்களுக்குச் சென்றாலும் ஆலய கட்டுமாண பணிகள் சிறப்பாக நடை பெற்றன கூரை வேலைககள் ஆரம்பிக்கப்பட்டது, அப்போது ஆலயம் ஒரு பிரமாண்டத்தை காட்டியதாக இருந்தது பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கான சீட்கள் போடப்பட்டன. வெளிப்பக்க சுவர்கள் மெது மெதுவாக பூசப்பட உள்ளே நிலம் கொங்கிறீட்டுக்கு ஆயத்தப்படுத்தப்பட்டது ஆலய நிலம் கொங்கிறீட் இட 250 சீமெந்து பக்கட்டுகள் தேவைப்பட யாரிடம் தேடலாம் என சிந்தித்து ஒரு ஞாயிறு திருப்பலியில் பங்குத்தந்தை அறிவித்த போது மறு நாளே பங்கு மக்கள் 250 சீமெந்திற்கும் பணம் சேர்த்து கொடுத்தமை மாதாவின் புதுமைகளில் ஒன்றாகவே இருந்து.

    ஒரு நிறைவை எட்டி ஆலயத்தை இவ்வருடமே திறக்கலாமா என ஒரு கேள்வியை பங்குத்தந்தை முன் வைக்க பங்குச்சபையும் கட்டிட குழுவும் ஆமோதிக்க நீங்கள் என் பின்னே வந்தால் தான் இது முடியும் என்றார். திருப்பவும் அதே வேகத்தில் அணைவரது செயற்பாடும் செயற்பட தொடங்கின கஜேந்திரன் மேலதிக வேலையாட்களை கொன்டு வேலைகளை செய்ய பெனா அங்கிள் அவர்களும் மறு புறம் மேலதிக வேலை ஆட்களை கொண்டு வேலைகள் மும்முரமாக செயற்பட்டு கொண்டிருதது.

  பங்குச்சபை, கட்டிடகுழு கூட்டத்தை மிக விரைவாக கூட்டிய பங்குத்தந்தை ஆலயத்தை   மார்கழி மாதம் 16 திகதி திறப்போமா என கேட்டார். அப்போது முன் முகப்பு கட்டுப்படவும் இல்லை, மாபில் பதிக்கவும் இல்லை, வெள்ளை அடிக்கவும் இல்லை உள் சுவரும் பூசுப்படாமல் இருந்தது. பங்குச்சபை உறுப்பினர்கள் 16 நாட்களில் சாத்தியப்படுமா சற்று தள்ளி திறப்போம் என கூற ஆண்டவரை நம்புக்கள் அவரே அணைத்தையும் செய்து முடிப்பார் என பங்குத்தந்தை கூற, அணைவரும் திறப்போம் என கூறி மீண்டும் தங்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக செயற்பட்டனர். மாபில் பதிக்க ஐந்து லட்சம் ரூபா வேண்டுமாக இருக்க அது ஒரு நன்கொடையாளரால் அன்றைய தினமே கிடைத்தது. வெள்ளை அடிக்க பில்லர் வாங்க வேண்டும் என்வுடன் பங்கு மக்கள் தங்கள் வட்டாரங்களில் தேடி அதனையும் கொடுத்தனர்.  

    15ம்திகதியும் வந்தது அதனோடு மழையும் சேர்ந்து வந்தது, இவர்கள் நாளை காலை இவ் ஆலயத்தை திறப்பார்களா இது முடியாது என கூறி சிலர் வீடுகளுக்கே சென்று விட்டனர். நாங்கள் நம்பிக்கையை தளர விடவில்லை இரவு பகலாக வேலை செய்தோம் மறு நாள் காலையில் நாங்களே எங்கள் ஆலயத்தை பார்த்து நம்பவில்லை அப்போது தான் என் மாதாவின் அளப்பெரிய புதுமையை நாங்கள் கண்டு கொண்டோம்.

 இவ்வாறு 16.12.2014ம் ஆண்டு அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆன்டகை அவர்களில் இவ்வாலயம் புதுப் பொழிவுடன் நாவற்குடா பங்கு மக்களிடம் நேர்தளித்து கொடுக்கப்பட்டது. இப்பாரிய பணியை செய்து முடித்த அப்போதைய பங்குத்தந்தை X.I.ரஜீவன் அடிகளாரையும் மற்றும் அக்கால பங்குச்சபையையும் இன்றும் நினைவு கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

என்றும் மாதவுடன் வாழும்.....

ஜெயா (பா.ஜெயதாஸன்)

ஆலய கட்டும் காலத்து பொருளாளர்.

Comments