227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி.....
227 ரன்கள் வித்தியாசம்... வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வங்கதேசத்தின் சாட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷன் 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 409 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் அதிபட்சமாக ஷாகிப் அல் ஹசன், எபாடட் ஹூசைன் மற்றும் தஸ்கின் அஹமத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசனை (43) தவிர மற்ற வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 34 ஓவர் முடிவில் 182 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணிஇ 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் அக்ஷர் பட்டேல் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மற்றவர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Comments
Post a Comment