காகிதநகர் 210B கிராம பிரிவில் பிரியாவிடை மற்றும் வரவேற்பு நிகழ்வு.....
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் 210B கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி அண்மையில் இடமாற்றலாகிச் சென்ற எம்.எல்.சியாத் அவர்களையும், பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் சமூக பாதுகாப்பு நிதி விடய உத்தியோகத்தராக கடமையாற்றி எதிர்வரும் 2022.12.31 அன்று தனது 26 வருட சேவை காலத்துடன் ஓய்வு பெற்றுச் செல்லும் ஏ.ஆர்.சம்சுதீன் அவர்களையும் கௌரவித்து பிரியாவிடை நிகழ்வும், உரிய பிரிவிற்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்த உத்தியோகத்தர் எஸ்.காண்டீபன் அவர்களை வரவேற்கும் நிகழ்வினையும் காகிதநகர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சங்க உதவி முகாமையாளர் ஏ.கே.எம்.சர்ஜூன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் ஏ.எம்.எம்.ஆரிபீன் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
காகிதநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் உரிய உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவுப்பரிசில்களும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment