கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறைபாடசாலையின் வருடாந்த ஒளிவிழா - 2022
மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா இயேசு சபைத்துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஒளிவிழாவின் சிறப்பு அதிதியாக அருட்தந்தை இயேசு சபைத்துறவி அனிஸ்டன் மொறாயஸ் கலந்து சிறப்பித்தார். அத்தோடு இயேசு சபைத்துறவி அருட்தந்தை D.சகாயநாதன், முன்னாள் பங்குதந்தை இயேசு சபைத்துறவி அருட்தந்தை ரொஷான் மற்றும் உதவி பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்தந்தை ஜோசப் மேரி, அருட்தந்தை நவரெட்ணம் மற்றும் இயேசு சபைத்துறவி அருட்தந்தை ஜூட் டிலக்ஷன், அருட்சகோதரிகள், பங்கு மேற்புப்பணிச்சபை மற்றும் மறைக்கல்வி மாணவர்கள், பங்கு மக்கள் என பலரும் இணைந்து சிறப்பித்தனர்.
அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களின் கலைப்படைப்புக்கள் அரங்கை அலங்கரித்திருந்ததுடன், அதிதிகள் உரை இடம்பெற்று, மறைக்கல்வி மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
Comments
Post a Comment