மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய கலைச் சங்கமம் - 2022
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பெருமையுடன் நடாத்திய கலைச் சங்கமம் - 2022 நிகழ்வானது மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் (02)ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில்
மிகப்பிரமாண்டமாக இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.பவளகாந்தன், காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஃரூப் கரீம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
பாரம்பரிய இசை முழங்க அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதம அதிதியினால் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து, மாவட்ட செயலக கீதம் என்பன இசைக்கப்பட்டு பிரதான அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களின் வரவேற்புரை மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறிகாந்த் அவர்களின் தலைமையுரையினைத் தொடர்ந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் கலைக்கழகங்களினால் வாள் நடனம், பாஞ்சாலி துதிக்கரம், வில்லுப்பாட்டு, றபான், நடனம், கஸீதா, பந்தாட்டம், பல்கலாசார நடனம், கிராமிய இசை, நாடகம், வில்லுப்பாட்டு, உடுக்கிசை, நவீன கூத்து, கிராமிய நடனம் மற்றும் மேலும் சில கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.
அத்தோடு நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.பவளகாந்தன், காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஃரூப் கரீம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு மலர் மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரின் சிறந்த சேவையை பாராட்டி இதன்போது கலாசார மற்றும் சமுர்த்தி பிரிவுகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு மலர் மாலை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலைஞர்களுக்கான பாராட்டும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் விசேட உரையினைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மேகன், மாவட்ட செயலக பிரதம உள்ளக . ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக கே.தயாபரன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஜெய்னுலாப்தீன், உற்பத்தி திறன் மாவட்ட இணைப்பாளர் புவனேந்திரன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment