அமரர் பிரான்சிஸ் சேவியர் மேரி நிர்மலேஸ்வரியின் நல்லடக்கம் (20) மாலை 3.00 மணிக்கு......
அருட்தந்தை X.I.ரஜீவன் அடிகளாரின் தாயார் அமரர் பிரான்சிஸ் சேவியர் மேரி நிர்மலேஸ்வரியின் நல்லடக்கம் (20) செவ்வாய்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. நாவற்குடாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, நல்லடக்கத்திற்காக நாவற்குடா கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மூதுரை பிறப்பிடப்பிடமாக கொண்ட இவர், தான் இறைவனிடம் சென்றடையும் வரை மட்டக்களப்பு நாவற்குடாவில் வாழ்ந்த ஓர் பாசமிகு தாயாவார். இவர் பிரபல ஆயுள்வேத வைத்தியரும் ஓய்வுபெற்ற கிராம சேவகருமான A.F.சேவியர் அவர்களை கரம் பற்றி 05 பிள்ளைகளின் தாயானார் இவர்களில் தன் ஒரே பேறான ஆண் மகனான அருட்தந்தை ரஜீவா இருதயராஜ் அவர்களை இறைபணிக்காக அர்பணிக்க துணிந்த தாயாக இவர் திகழ்கின்றார்.
எல்லோரிடமும் அன்பாக பழகும் இவர் யாருடனும் சண்டையிட்டதாக வரலாறே இல்லை என்றே கூறலாம். யாரை சந்தித்தாலும், முதலில் நெற்றியில் குருசிடும் இவர் அன்றைய தினம் சந்தித்த அனைவருக்காகவும் செபமாலை ஓப்புக்கொடுப்பார். தன் இறுதி காலம் வரை இறைபணிக்காக நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் மரியாயின்சேனையின் அங்கத்தவராக செயற்பட்ட ஓர் உன்னத தாயாவார்.
Comments
Post a Comment