சுஜியின் அரைச்சதத்துடன் 150 ஓட்டத்தை எட்டிய EPP அக்கடமி.....
EPP கிரிக்கெட் திருவிழா முதல் போட்டியில் EPP அக்கடமியும் மல்வான அக்கடமியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடி EPP அக்கடமி 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சுஜி அவர்கள் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 44 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு 09 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை கடந்தார். இவருக்கு துணையாக சஞ்சயன் 20 ஓட்டங்களையும், சாரு 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் மல்வான அக்கடமி சார்பாக மபாஸ், ரம்சான், முஸ்றிப், மஹபா தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றி இருந்தனர். தற்போது மல்வான அக்கடமி துடுப்பெடுத்தாடுவதற்கு தயாராக உள்ளது.
Comments
Post a Comment