Testenium, meta - Computing நிறுவனத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

Testenium, meta - Computing நிறுவனத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!



Testenium, meta - Computing நிறுவனத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது .

Testenium  நிறுவனமானது Online Testing Platform ஒன்றினை நிறுவி இயக்கி வரும் நிலையில் அதன் நிறுவுனரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான கலாநிதி அரசரட்ணம் அரசிளங்கோ பல்கலைக்கழகத்தின் பால் கொண்ட பற்றின் காரணமாக தகவல் தொழில்நுட்ப கல்வியின் அடுத்த பரிமாணத்தை நமது மாணவர்களிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் விடாமுயற்சியின் பலாபலனாகிய இம் முன்னெடுப்பு இலங்கை பல்கலைக்கழகங்களில் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் ஆங்கில போதனா மையத்தின் துறைத்தலைவரும் ஒப்பந்தத்தின் இணைப்பாளருமான கலாநிதி உமாசங்கர் கருத்துரை வழங்கும் போது அடுத்த மூன்று வருடத்தில் meta-computing மூலம் கிழக்குப்பல்கலைக்கமானது இலங்கையில் தனித்துவமான அடையாளமாக மாறும் என்பதில் ஐயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன், தகவல் தொழிநுட்ப மையத்தின் இயக்குனர்இ மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.








Comments