T/20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலி சாதனை படைத்திருக்கிறார்......

T/20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலி சாதனை படைத்திருக்கிறார்......


குறுகிய காலத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் சொந்தமாக்கியவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தமான துடுப்பாட்டத்தால் பெரிதாகச் சதங்கள் ஏதும் அடிக்காமலும் இருந்த விராட் கோலி தற்போது நடந்து வரும் T/20 உலகக் கோப்பை தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன் துடுப்பாட்டத்தை காண்பித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் துடுப்பாட்ட சாதனைகளை மீண்டும் முறியடிக்கவும் தொடங்கியிருக்கிறார். 

தற்போது நடந்து வரும் T/20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்களையும் எடுத்த விராட் கோலி, பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய (02) ஆட்டத்திலும் 64 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் விராட் 16 ரன்களை எட்டியபோது T/20 உலகக் கோப்பையில் 1017 ஓட்டங்களை தொட்டார். இதன் மூலம் T/20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் இதுவரை 1016 ரன்களை எடுத்து முதலிடத்திலிருந்த இலங்கை கிரிக்கெட் வீரரான மஹேலா ஜெயவர்தனவின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் T/20 உலகக் கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன் வசமாக்கியிருக்கிறார்.



Comments