சமுர்த்தி CBO அலுவலகம் திறந்து வைப்பு....

 சமுர்த்தி CBO அலுவலகம் திறந்து வைப்பு....



கோப்பாவெளி கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் (CBO)  அலுவலம் அன்மையில் திறந்து வைக்கப்பட்டன.

 சமுர்த்தி திணைக்களத்தின் தற்காலத்தின் மிக முக்கியமான வேலைத்திட்டமான சமுதாய அடிப்படை அமைப்புக்களை (CBO) பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கட்டமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் முகாரின் சமுதாய அடிப்படை அமைப்பின் (CBO) காரியாலயம் அன்மையில் திறந்து வைக்கப்படதுடன், சமுதாய அடிப்படை அமைப்பின் (CBO) ஊடாக 05 சமுர்த்தி பயனுகரிகளுக்கு அரநெலுவ கடன்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கோப்பாவெளி சமுர்த்தி வங்கியில் மர நடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு (CBO) பொறுப்பான முகாமையாளர் க.பகீரதன் அவர்களும், கோப்பாவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.சிவாகரன் அவர்களும், கோப்பாவெளி கிராமத்தின் சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு (CBO) பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.சசிகரன் அவர்களும், கோப்பாவெளி கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் T.டிலக்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர். 







Comments