சமுர்த்தி வங்கியூடாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மேலதிகமான கொடுப்பணவு......
சமுர்த்தி வங்கியின் ஊடாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான மேலதிக கொடுப்பணவாக 2500 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கான கொடுப்பணவே தற்போது வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுவதாகவும், இதற்காக குறித்த கர்ப்பிணித்தாய் மற்றும் பாலுட்டும் தாய் சமுர்த்தி வங்கியில் ஓர் கணக்கினை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவரது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டு உரிய பயனாளிக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமுர்த்தி வங்கியில் அங்கத்தவர், திரியமாதா மற்றும் அங்கத்தவர் அல்லாதோர் கணக்குகளை பேனி வருவோர் புதிதாக கணக்குகளை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே 10 மாதங்களுக்கான 2000 ரூபாய் பெறுமதியான பொதி கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment