போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு....
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 43 கிராமசேவகர் பிரிவுகளில் சமுர்த்தி பிரிவினால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. போரதீவு பற்று பிரதேச செயலாளர் R.ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்புக்களை கருத்தில் கொண்டும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனும் இப்பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சிரமதான பணிகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒவ்வொரு கிராமம் ரீதியாக அக்கிராமங்களில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். இச்சிரமதான பணிகளில் போரதீவு பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் A.தனேந்திரராஜா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் A.குககுமாரன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment