வாழைச்சேனை ஆயிஷாவில் பசிபோக்கும் வேலைத்திட்டம்!!

 வாழைச்சேனை ஆயிஷாவில் பசிபோக்கும் வேலைத்திட்டம்!!

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் நலன் கருதி பாடசாலையில் உணவுப் பெட்டகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில்,  றிஷிலைன்ஸ் பவுன்டேசனின் அனுசரணையில் இந்நிகழ்வு பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் கடந்த (22) திகதி இடம்பெற்றுள்ளது.

இங்கு ஒரு உணவுப் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் மாணவிகளின் பசி நீக்க உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அதில், தேவையான மாணவிகள் எடுத்துக் கொள்ளவும், இயலுமான மாணவிகள் வைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இத் திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நஸீர், பாடசாலை பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர் இம்தியாஸ், பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத், இளைஞர் சேவை பயிலுனர் ஏ.எஸ்.ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.






Comments