கல்லடியில் கொமர்சல் வங்கியின் தானியங்கி வங்கி இயந்திரம் திறந்து வைப்பு....

 கல்லடியில் கொமர்சல் வங்கியின் தானியங்கி வங்கி இயந்திரம் திறந்து வைப்பு....


மட்டகளப்பு கல்லடி E.M.S வைத்தியசாலைக்கு அருகில் கொமர்சல் வங்கியின் பணம் பெறுதல் மற்றும் பணம் வைப்பில் இடும் இயந்திரம்  திறந்து வைக்கப்பட்டது.

கொமர்சல் வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொமர்சல் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் உமாமாதவன், E.M.S வைத்தியசாலை தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சட், வைத்தியசாலை நிர்வாகிகளான நடேசமூர்த்தி, மகிந்த மற்றும் வங்கி ஊழியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இந்த இயந்திரமானது மட்டக்களப்பில் 4 வது தானியங்கி கொமர்சல் வங்கி இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கதுடன், இவ் இயந்திரம் மூலம் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என கொமர்சல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஜெயபாலன் தெரிவித்தார்.


Comments