கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி வங்கியினூடாக கொடுப்பணவு வழங்கி வைப்பு....

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி வங்கியினூடாக கொடுப்பணவு வழங்கி வைப்பு....



 தற்போது சமுர்த்தி வங்கிகளின் ஊடாக பல கொடுப்பணவுகள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன். இதன் அடிப்படையில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி ஊடாக மாற்றுத்திரனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பணவுகளை  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி ரமீசா  அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம்.ஆரிப், விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் லோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.








 




Comments