பல்சமய ஒன்றியத்தினால் மதஸ்தலங்களில் மரநடுகை!!

 பல்சமய ஒன்றியத்தினால் மதஸ்தலங்களில் மரநடுகை!!



பல்சமய ஓன்றியத்தின் ஏற்பாட்டில்  மதஸ்தலங்களிற்கிடையே  அந்நியோன்னியத்தை  ஏற்படுத்துமுகமாக மதத்தலைவர்களுக்கிடையேயான ஒன்றுகூடல்கள் அன்மைக்காலமாக இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்தியஸ்தானத்தில் விசேட கலந்துரையாடலொன்று   இடம்பெற்றுள்ளது.

மதங்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தி,  ஐக்கியத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறான கலந்துரையாடல்களை மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கலந்துரையாடல்களின் நினைவாக மதத்தலைவர்களினால் கனிதரும் மரங்கள் நடப்பட்டு வரும் நிலையில், ஜெயந்திபுரம் பௌத்த மத்தியஸ்தான வளாகத்திலும் சர்வமத தலைவர்களினால் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி அழகுதுரை யேசுதாசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அடிகளார், பிள்ளையாரடி விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆலய பிரதம குரு உத்தம ஜெயதீஸ்வர குருக்கள், ஜெயந்திபுரம் பௌத்த மத்தியஸ்தான நிலையத்தின் விகாராதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன், குறித்த நிகழ்வை கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட  இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டி இணைப்பாக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நல்லினக்க  நடடிக்கைகளை மட்டக்களப்பு எகெட் ஹரீத்தாஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன், மாவட்ட பல்சமய ஒன்றியம் தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Comments