கல்லாறு முகத்துவாரத்தை அகழ இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் துரித நடவடிக்கை.......
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு மீனவர்களினாலும் விவசாயிகளினால் விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் கல்லாறு முகத்துவாரத்தினை அகழ்வு செய்து நீர் வடிந்து கடலுடன் கலப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் (05) சனிக்கிழமை களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த திணைக்கள அதிகாரிகளை அழைத்து உடனடியாக குறித்த முகத்துவாரத்தினை அகழ்வு செய்யுமாறு பணித்துள்ளதுடன் இதற்கான மேலதிக செலவினங்களை தனது பிரத்தியேக நிதி ஒதுக்கீடு மீள மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது
இக்கள விஜயத்தின் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் வரதன், நிர்பாசன திணைக்கள பொறியியலாளர் நாகரத்தினம். இணைப்புச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment