மட்டக்களப்பு மாநகர சபையினால்: பல்கலைக்கு தெரிவான மாநகர சபை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கௌரவிப்பும், புலமைப்பரிசில் வழங்கும் திட்டமும் ....

 மட்டக்களப்பு மாநகர சபையினால்: பல்கலைக்கு தெரிவான மாநகர சபை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு  கௌரவிப்பும், புலமைப்பரிசில் வழங்கும் திட்டமும் ....

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும்  அனைத்து ஊழியர்களின் பிள்ளைகள்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்தால் அவர்களை  கௌரவிப்பதுடன்,  20000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்பட இருப்பதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் திட்டமும் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகர சபையினால்  நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, இப் புலமைப்பரிசில் திட்டத்தில் எமது மாநகர சபையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வேலைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்வாங்கப்படவுள்ளதாகவும், அவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மாததாந்தம் 4000 ரூபாவும், பிற பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வெளி மாகாணங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு மாததாந்தம்  8000 ரூபாவும் வழங்க ஏற்பாடு செய்ததுள்ளதாகவும் தெரிவித்து, இத் திட்டத்தை அமுல்படுத்த பாதீட்டில் அங்கீகாரம் வழங்கிய அனைத்து மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments