களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையும் கருத்தரங்கும்......
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையும் கருத்தரங்கும்......
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டில் 05ம் தரபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் வினைத்திறனை விருத்தி செய்வதற்கான இலவச முன்னோடிப் பரீட்சையும், கருத்தரங்கும் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் (26)ம் திகதி களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.சந்திரசோதி, சந்தியவாணி மனோகரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எஸ்.சத்தியசீலன், எஸ்.ஞானசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் வளவாளர்களாக ச.ஜெயகரன் ஆசிரியர் அவர்களும், வ.செல்வராஜா ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டதுடன், இம் மாணவர்களுக்கு உளவளத்தினை ஆற்றுப்படுத்துவதற்கான நிகழ்வினை பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சத்தியவாணி மனோகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெய்வநாயகம் உதயசுதன் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment