அரச அதிபர் கிரிக்கெட் சுற்று போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவாகிய மாவட்ட செயலக அணி.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கிடையில் அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கிரிக்கெட் அணி 25ம் திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் விளையாட தெரிவாகியுள்ளது.
இப்போட்டியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் உடல், உள வலிமையை அதிகரிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட போட்டியாகும். இப்போட்டியானது 23ம் திகதி ஆரம்பமாகி 24ம் திகதியில் காலிறுதி போட்டிகள், அரையிறுதி போட்டிகள் நடாத்தப்பட்டு இறுதிப்போட்டியானது நாளை 25 நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment