சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் செயலமர்வு.......

 சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் செயலமர்வு.......

சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கரையோரப்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான செயலமர்வு  (28) அன்று புதிய காத்தான்குடி  அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

காத்தான்குடி பதுரியா வித்தியாலயம், அல்இக்பால் வித்தியாலயம், அமீர் அலி வித்தியாலயம், பிர்தௌஸ் வித்தியாலயம், இக்றா வித்தியாலயம் மொஹிதீன்  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த  மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வினை   காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் ஆரம்பித்து வைத்தார். உதவிப்பிரதேச செயலாளர்  சில்மியா  சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர், சமுர்த்தி வலய உதவியாளர்,  திட்ட உதவியாளர் ஆகியோர்  இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர். 

சமுர்த்தி வேலைத்திட்டத்தில்  கல்விக்கான மேம்பாட்டுத் திட்டங்களி்ல் ஒன்றாக பின்தங்கிய பிரதேசங்களின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இக்கருத்தரங்குகள்  நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Comments