பெற்றோருக்கான போதைப்பொருள் விழிப்பூட்டல் செயலமர்வு............

 பெற்றோருக்கான போதைப்பொருள் விழிப்பூட்டல் செயலமர்வு............



ஆற்றல் பேரவை ஆரையம்பதி பிரதேச செயலகத்துடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்ட பெற்ரோருக்கான போதைபொருள் விளிப்பூட்டல் செயலமர்வு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து செல்லும் போதைப்பொருள் பாவனை மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்திலும் கணிசமான தாக்கத்தினை உருவாக்கியுள்ள நிலையில் கிராமங்களில் வசிக்கின்ற இளையோர் மாறுதலடைகின்ற செயற்பாடுகள் தொடர்பில் பொற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், வீட்டில் வசிக்கும் இளையோரின் போதைப்பொருள் பாவனையின் மாறுபட்ட செயல்பாடுகள் தொடர்பில் சமூக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆரையம்பதி செல்லாநகர் கிழக்கு பிரதேசத்தின் பொதுமக்களிடையே விழிப்பூட்டல் செயற்திட்டம் (03) முன்னெடுக்கப்பட்டது .

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆற்றல் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களிடையே விழிப்பூட்டல் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்.ந.சத்தியானந்தி, ஆற்றல்பேரவை தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், போதை பொருள் விழிப்பூட்டல் செயற்திட்டத்தினை முன்னெடுத்த வைத்தியர் சௌந்தர்ராஜன், ஆற்றல் பேரவைச் செயலாளர் கிஸ்கந்த முதலி, பெருளாளர் ஜெக்கப், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் சமூக மட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






Comments