மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும்!!

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும்!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் (20)ம் திகதி மட்டக்களப்பு திராய்மடுவில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி ஓய்வுபெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமைகளை ஆற்றி வருகின்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார நிகழ்வும், இந்த வருடத்தின் ஒன்று கூடல் நிகழ்வுமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது நலன்புரிச்சங்க போசகரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் தலைமையில் திராய்மடு பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

மெளன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது நலன்புரிச்சங்க தலைவரும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான சுதர்சனி ஸ்ரீகாந் அவர்களின்   வரவேற்புரையினை தொடர்ந்து உடலுக்கும் மனதிற்கும் வலிமை சேர்க்கும் வண்ணமான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,  கிளைகள் ரீதியாக  உத்தியோகத்தர்களினால் பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரின் உரை, நினைவு உரைகள் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்விற்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த  ஓய்வுபெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு கௌரவிக்கப்பட்டவர்களின் ஏற்புரையும் இடம்பெற்றிருந்தது.

மாவட்ட செயலக முன்னால் பிரதம கணக்காளர்களான எஸ்.நேசராஜா, கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலகத்தின் முன்னால் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செலியன், மாவட்ட  செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ரீ.தேவகாந்தன், மாவட்ட செயலகத்தின் முன்னால் கணக்காளர் கே.பிறேம்குமார் உள்ளிட்ட மேலும் பல உத்தியோகத்தர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மேகன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட  செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதீஸ்குமார், ஆ.சுதாகரன், வீ.நவநீதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன்,நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ்.எம்.பஸீர், மாவட்ட விவசாய பணிப்பாளர்  இராஜதுரை ஹரிகரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.













   

Comments