சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் தொடர்பான கருத்தரங்கு....
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்படுகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடுகின்ற தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வகையில் உற்பத்தி பொருட்களை பொதி செய்தல் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் வழிகாட்டலின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் A.சுதர்சன் தலைமையில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் N.கோகுலதாஸ் கலந்துகொண்டார்.
Comments
Post a Comment