ஏறாவூர் அறபா கல்லூரி பழைய மாணவர்களால் முன்னுதாரன செயற்பாடு.........

 ஏறாவூர் அறபா கல்லூரி பழைய மாணவர்களால் முன்னுதாரன செயற்பாடு.........

அறபா பாடசாலையில் 2003ம் ஆண்டு தரம் 9இல் கல்விகற்ற  பழைய மாணவர்களின் ஒரு முயற்சி இன்று மற்றைய பாடசாலைகளுக்கு ஒரு முன்னுதார செயற்பாடக திகழ்கின்றது.

மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் பாடசாலை வகுப்பறைகளில் காணப்படும் குறைபாடுளை அறிந்து, 2003ம் ஆண்டில்  தரம் 9A, 9B ஆகிய வகுப்புக்களில் கல்வி பயின்ற பழையமாணவர்கள், தாம் இறுதியாக கல்வி பயின்ற இரண்டு வகுப்பறையிலும் தற்போது காணப்பட்ட சில குறைபாடுளை  தாமாகவே முன் வந்து நிவர்த்தி செய்துள்ளார்கள்.

இவ்வகுப்பறையில் காணப்பட்ட குறைபாடுகளான தரை செப்பனிடல், தளபாடங்களை சீரமைத்தல், கரும்பலகை மற்றும் வகுப்புச் சுவர்களுக்கு வர்னம் பூசுதல் போன்ற குறைபாடுளை  நிவர்த்தி செய்து 2022-11-17ஆம் திகதி  பாடசாலையின் முன்னாள் அதிபர் ACM.சயிட் அவர்களினால் திறந்து  வைக்கப்பட்டு பாடசாலையின் தற்போதைய அதிபர் SMM.நவாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் இப்பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் ACM.சயிட், 2003ம் ஆண்டு தரம் 9இல் கல்வி கற்ற மாணவர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வின் போது 2003ம் ஆண்டு  தரம் 9இல் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் விளையாட்டுப்பயிற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக சிறு தொகை பணம்  வழங்கிவைக்கப்பட்டதோடு, எதிர்  வரும் காலங்களிலும் தமக்கு ஆரம்பக்கல்வி அறிவூட்டிய இத் தாய்ப்பாடசாலையின் அபிவிருத்திப்பணிகளில், இயலுமானவரை உதவிசெய்வோம் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று பாடசாலையின் ஏனைய குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய எமது பாடசாலையின் ஏனைய ஆண்டுகளில் கற்ற பழைய மாணவர்களும் பாடசாலைக்காக உதவி செய்திட முன்வர வேண்டும் எனும் கோரிக்கையையும் முன் வைத்தனர்.













Comments