ரிங்கோ போய்ஸ் நடாத்திய பாடசாலை கிரிக்கெட் போட்டி இணைச்சம்பியனான முடிவு......
ரிங்கோ போய்ஸ் வியைளாட்டு கழகம் தங்கள் 4வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி இணை சம்பியனான முடிவுடன் முடிவுற்றது.
இறுதிப்போட்டியில் விளையாட மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியும், திருகோணமலை சிங்கள் மகா வித்தியாலயமும் தெரிவாகி இருந்தது. 08.11.2022 இறுதிப்போட்டி என அறிவித்து, திருகோணமலை கிரிக்கெட் சங்க மைதானத்தில் போட்டி ஆரம்பமாக இருந்த வேளை மழை குறுக்கிட்டது. இருந்த போதிலும் போட்டி தாமதமாக ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டு நடுவர்கள் மீண்டும் போட்டியை நடாத்த தீர்மானித்து போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மட்டக்களப்பு புனித மிக்கல் 8 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்கள் பெற்ற போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டியை தொடர முடியவில்லை.
இதன் காரணமான இறுதி போட்டியில் விளையாடிய மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியும், திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயமும் இணை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வெற்றி கின்னம் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment